மலையாளப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ள மேக்னா வின்சென்ட், தனது காதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்றவர் கொச்சியைச் சேர்ந்த மேக்னா வின்சென்ட். இதன்பிறகு படங்களிலும் நடித்துள்ளார். பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்திலும் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் போன்ற தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.
டான் டோனி என்கிறவரைக் காதலித்து ஏப்ரல் 30, 2017-ல் திருமணம் செய்துகொண்டார் மேக்னா. ஆனால் திருமணம் ஆன ஓராண்டிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வந்தார்கள். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி சமீபத்தில் விவாகரத்து பெற்றுள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.