செய்திகள்

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இணையும் துப்பாக்கி 2 படத்துக்கு தமன் இசை?

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள துப்பாக்கி 2 படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் உருவாகவுள்ள துப்பாக்கி 2 படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 2012-ல் வெளியான துப்பாக்கி படம், பெரிய வெற்றியை அடைந்தது. இதன்பிறகு இதே கூட்டணியில் கத்தி, சர்கார் போன்ற படங்கள் வெளிவந்தன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார் விஜய். இதற்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2 படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக தமிழ்த் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் துப்பாக்கி 2 படத்துக்கு தமன் இசையமைக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமன் சமீபத்தில் இசையமைத்த தெலுங்குப் படங்களின் பாடல்கள் ஹிட் ஆனதால் துப்பாக்கி 2 படத்துக்கு தமனை ஒப்பந்தம் செய்ய முருகதாஸும் விஜய்யும் முடிவு செய்துள்ளார்கள். கரோனா பாதிப்புகள் முடிந்தபிறகு துப்பாக்கி 2 குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பு தீர்ப்பு எதிரொலி: சென்செக்ஸ் 479.95 புள்ளிகள் உயர்வு!

த்ரிஷ்யம் - 3 மோகன்லால் போஸ்டர்!

தவெக வார்டு செயலாளர்... தாய் கிழவி டிரைலர்!

முடிந்த ஓராண்டிற்குள் மீண்டும் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர்!

தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு! பேசியது என்ன?

SCROLL FOR NEXT