முகப்பு
செய்திகள்

சமூகவலைத்தளத்தில் நடிகர் செந்திலைப் பின்தொடர்கிறீர்களா?

சமூகவலைத்தளங்களில் திரையுலகினரின் பெயரில் போலிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:


சமூகவலைத்தளங்களில் திரையுலகினரின் பெயரில் போலிக் கணக்குகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

சமீபத்திய போலி ட்விட்டர் கணக்கு - நடிகர் செந்தில்.

செந்தில் பெயரில் ட்விட்டர் கணக்கு ஒன்று உருவாகி அதிலிருந்து ஒரு அறிக்கையும் வெளியானது. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினரும் அந்தக் கணக்கைப் பின்தொடர ஆரம்பித்தார்கள்.

இந்நிலையில் மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, செந்தில் பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கு போலியானது எனக் கூறியுள்ளார்.

சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கராவும் இதுபோன்ற ஒரு வேண்டுகோளை விடுத்தார். தன் பெயரில் உள்ள போலி ட்விட்டர் கணக்கை யாரும் பின்தொடரவேண்டாம் என சூரரைப் போற்று பட இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →