முகப்பு
செய்திகள்

நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேனா?: இயக்குநர் பாரதிராஜா விளக்கம்

எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம்...

Updated On : 6 மே, 2020 at 2:00 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:06 PM

சென்னையிலிருந்து தேனி சென்ற இயக்குநர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று வெளியான செய்திகளுக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக பாரதிராஜ வெளியிட்டுள்ள விடியோவில் கூறியுள்ளதாவது:

பாரதிராஜா, தேனியில் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. நடந்தது என்ன? என் சகோதரி தேனியில் உடல்நலமில்லாமல் இருக்கிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்பதற்காக முறைப்படி அதற்கான அனுமதிச்சீட்டு வாங்கி, பல மாவட்டங்களைக் கடந்து வந்து என் சகோதரியைப் பார்த்தேன். அவர் அறுவை சிகிச்சையில் இருக்கிறார்.

Advertisement

நான் பல மாவட்டங்களைக் கடந்து வந்ததால் தேனி நகராட்சி சுகாதார அமைப்பிடம் பேசி, தற்காப்புக்காக என்னைச் சோதித்துக் கொள்ளுங்கள் என்றேன். மூன்று முறை பரிசோதனைகள் செய்தார்கள். சென்னையில் முதலில் பரிசோதனை செய்தார்கள். பிறகு வழியில் ஆண்டிபட்டியிலும் இப்போது தேனியிலும் பரிசோதனை செய்ததில் மூன்றிலும் நெகடிவ் என்றே முடிவுகள் வந்தன. என்னுடன் அழைத்து வந்த உதவியாளர்களுக்கும் பரிசோதனை முடிந்தது. மகிழ்ச்சியாக தேனியில் உள்ளோம். எங்களை யாரும் தனிமைப்படுத்தவில்லை. மக்களின் நலன் கருதி நாங்களே எங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். இதுதான் நடந்த உண்மை.

எனது உதவியாளர்களுடன் இணைந்து அடுத்த படத்தின் கதைக்கான விவாதத்தில் ஈடுபட்டுள்ளோம். நாங்கள் நல்ல உடல்நலத்துடன் உள்ளோம் என பாரதிராஜா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.