செய்திகள்

மெர்சல் தயாரிப்பாளருடன் மீண்டும் இணையவுள்ள விஜய்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

DIN

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த படம் மெர்சல். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.

விஜய் - தேனாண்டாள் ஃபிலிம்ஸ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

தேனாண்டாள் ஃபிலிம்ஸைச் சேர்ந்த முரளி ராமசாமி ஒரு பேட்டியில் கூறியதாவது:

மெர்சல் படம் எங்களுக்கு லாபத்தை அளித்தது. அது தோல்விப் படமல்ல. படம் வெளியாகும் போது சூழல் சரியாக இல்லை. விஜய்யுடன் எனக்கு நல்ல புரிதல் உண்டு. சமீபத்தில் விஜய்யுடன் பேசினேன். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்துக்கு அடுத்ததாக இருவரும் இணையும் படம் பற்றி பேசலாம் எனக் கூறினார் என்று பேட்டியளித்துள்ளார்.

மெர்சல் படம் ரூ. 250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. மாஸ்டர் படத்துக்கு அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் கணக்கு!

SCROLL FOR NEXT