செய்திகள்

தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டின் பணியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று

DIN

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டின் பணியாளருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார்.

போனி கபூர் வீட்டின் பணியாளரான 23 வயது சரண் சாகுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மும்பை அந்தேரியில் உள்ள போனி கபூரின் வீட்டிலேயே அவர் வசித்து வந்தார். மே 16 அன்று உடல்நலக் குறைவுடன் சரண் இருந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியுள்ளார் போனி கபூர். பிறகு அவர் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் பரிசோதனையின் முடிவில் சரணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து சரண் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்திகொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பை மாநகராட்சி செய்துள்ளது.

இதுகுறித்து போனி கபூர் கூறியதாவது: நானும் எனது மகள்களும் அலுவலக ஊழியர்களும் நலமுடன் உள்ளோம். யாருக்கும் எவ்வித கரோனா அறிகுறிகளும் கிடையாது. ஊரடங்கு ஆரம்பித்த பிறகு நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. எனினும் எங்களைத் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை மாநகராட்சிக்கு நன்றி. விரைவில் குணமடைந்து சரண் எங்களுடைய வீட்டுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT