செய்திகள்

பேட்ட படத்தில் நடித்த பிரபல நடிகருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி

திருமண வாழ்க்கையில் சுய மரியாதை என்பது முக்கியம்...

DIN

பேட்ட படத்தில் நடித்த நவாசுதீன் சித்திக் குடும்ப வாழ்க்கையில் புயல் வீசியுள்ளது.

அவருடைய மனைவி ஆலியா, நவாசுதீன் சித்திக்கிடம் விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நவாசுதீனும் ஆலியாவும் 2009-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இருவருக்கும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளார்கள். 46 வயது நவாசுதீன், 1999 முதல் படங்களில் நடித்து வருகிறார். தி லஞ்ச் பாக்ஸ், மேண்டோ, ராமன் ராகவ் 2.0 போன்ற படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகப் பாராட்டப்பட்டவர். 2012-ல் நான்கு படங்களில் சிறப்பாக நடித்ததற்காக சிறப்பு தேசிய விருதைப் பெற்றார். சர்வதேசப் படவிழாக்களிலும் ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

விவாகரத்துக்கான காரணம் குறித்து ஒரு பேட்டியில் ஆலியா கூறியதாவது:

10 வருடங்களுக்கு முன்பு, திருமணமானவுடனே எங்கள் வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் தோன்றின. ஊரடங்கு உத்தரவினால் கடந்த இரு மாதங்களாக யோசிக்க நிறைய நேரம் கிடைத்தது. திருமண வாழ்க்கையில் சுய மரியாதை என்பது முக்கியம். தனிமையில் இருப்பதாக உணர்கிறேன். அவருடைய சகோதரர் ஷமாஸும் பிரச்னைக்கு ஒரு காரணம். அஞ்சனா என்கிற என்னுடைய நிஜ பெயருக்குத் தற்போது மாறிவிட்டேன். எதிர்காலத்தைப் பற்றி எண்ணவில்லை. ஆனால், எனக்கு இந்தத் திருமணம் வேண்டாம். இரு குழந்தைகளையும் இதுவரை நான் தான் வளர்த்துள்ளேன். இனிமேலும் நான் தான் வளர்ப்பேன் என்றார்.

ஊரடங்கு உத்தரவு காரணமாக, மே 7 அன்று ஆலியாவின் வழக்கறிஞர், நவாசுதீனுக்கு வாட்சப் வழியாக விவாகரத்து கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எனினும் இதற்கு இதுவரை நவாசுதீன் பதில் அளிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT