செய்திகள்

போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று

DIN

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார்.

போனி கபூர் வீட்டின் பணியாளரான 23 வயது சரண் சாகுவுக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மும்பை அந்தேரியில் உள்ள போனி கபூரின் வீட்டிலேயே அவர் வசித்து வந்தார். மே 16 அன்று உடல்நலக் குறைவுடன் சரண் இருந்துள்ளார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள உதவியுள்ளார் போனி கபூர். பிறகு அவர் தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார். பிறகு, பரிசோதனையின் முடிவில் சரணுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து சரண் சிகிச்சை பெற்று, தனிமைப்படுத்திகொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பை மாநகராட்சி செய்துள்ளது.

இதுகுறித்து போனி கபூர் கூறியதாவது: நானும் எனது மகள்களும் அலுவலக ஊழியர்களும் நலமுடன் உள்ளோம். யாருக்கும் எவ்வித கரோனா அறிகுறிகளும் கிடையாது. ஊரடங்கு ஆரம்பித்த பிறகு நாங்கள் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. எனினும் எங்களைத் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோம். தகவல் தெரிந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுத்த மும்பை மாநகராட்சிக்கு நன்றி. விரைவில் குணமடைந்து சரண் எங்களுடைய வீட்டுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

சரண் சாகுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானவுடன் போனி கபூர் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் போனி கபூர் மற்றும் அவருடைய இரு மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பின்றி நலமுடன் உள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: விருதுநகரில் வெல்லப்போவது யார்?

இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்: ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர்

கங்கனா ரணாவத் 73 ஆயிரம் வாக்குகள் முன்னிலை!

அந்தமானில் பாஜக முன்னிலை

பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஃபைசாபாத்?

SCROLL FOR NEXT