செய்திகள்

கமல் படத்தில் நான் நடிக்கவில்லை: பூஜா குமார்

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் கமலுடன் இணைந்து நடித்த பூஜா குமார்...

DIN

இந்தியன் 2 படத்துக்குப் பிறகு கமல், தலைவன் இருக்கின்றான் என்கிற படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகம் எனக் கூறப்படுகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளன. இசை - ஏ.ஆர். ரஹ்மான். விஜய் சேதுபதி, வடிவேலு ஆகியோர் நடிப்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் கமலுடன் இணைந்து நடித்த பூஜா குமார், தலைவன் இருக்கிறான் படத்திலும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

இதுபற்றி ஒரு பேட்டியில் பூஜா குமார் கூறியதாவது: தலைவன் இருக்கிறான் படத்தில் நான் நடிக்கவில்லை. ஆனால் ஒருவேளை நாளை இந்தப் படத்தில் நடிக்கவும் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT