முகப்பு
செய்திகள்

என்னை அறிந்தால் 2: கதை உருவாக்கத்தில் ஈடுபட்டு வரும் கெளதம் மேனன்

என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஊரடங்குக் காலத்தில் எழுதியுள்ளேன்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுடனான இன்ஸ்டகிராம் உரையாடலில் கெளதம் மேனன் கூறியதாவது:

என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை ஊரடங்குக் காலத்தில் எழுதியுள்ளேன். மிகவும் நன்றாக வந்துள்ளது. கதாபாத்திரத்தின் அடுத்தக்கட்டத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும். என்றாவது ஒருநாள் அஜித்திடம் இந்தக் கதையைக் கூறுவேன்.

துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளில் விக்ரம் விரைவில் கலந்துகொள்வார். இந்தப் படம் திரையரங்கில் தான் வெளியாகும். மற்ற பெரிய படங்களோடு இந்தப் படமும் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு இழுக்கும் என நம்புகிறேன் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →