முகப்பு
செய்திகள்

படம் முழுக்க சிரிக்காமல் நடித்தது புதிய அனுபவம்: சூரரைப் போற்று பற்றி சூர்யா

இந்தப் படத்தில் என்னையே வித்தியாசமாகப் பார்த்தேன். படம் முழுக்கச் சிரிக்காமல் நடித்ததே...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

சூரரைப் போற்று படம் திட்டமிட்டபடி அக்டோபர் 30 அன்று வெளியாவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. விமானம் தொடர்பான கதை என்பதால் இந்திய விமானத்துறையிடமிருந்து அனுமதி வாங்கிய பிறகுதான் படத்தை ஓடிடியில் வெளியிடமுடியும். இதனால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்படுவதாக சூர்யா தெரிவித்தார். 

தற்போது, சூரரைப் போற்று படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இப்படம் தீபாவளிக்கு அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்பு நவம்பர் 12 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

இப்படம் பற்றி சூர்யா கூறியதாவது:

நான் பிரமாதமான நடிகன் கிடையாது. கேமரா முன்னால் உடனடியாக என்னால் நடிக்க முடியாது. படப்பிடிப்புக்கு முன்பே அனைத்து விஷயங்களையும் பேசி முடிவு செய்துவிட்டோம். எல்லாக் காட்சிகளும் ஓரிரு டேக்கில் ஓகே ஆகிவிடும். படத்தில் 96 கதாபாத்திரங்கள் உள்ளன. ஒரு வசனமாக இருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பவரை அலுவலகத்துக்கு வரவைத்து ஸ்கிரீன் டெஸ்ட் செய்துள்ளார் இயக்குநர் சுதா. 

இந்தியாவின் முகத்தை மாற்றியவர்களில் கோபிநாத்தும் ஒருவர். விமானப் போக்குவரத்தைத் துறையை அப்படியே மாற்றினார். அவருடைய கதையைக் கொண்டு சுவாரசியமான திரைக்கதையை எழுதியுள்ளார் சுதா.

சில படப்பிடிப்புகளில் தான் நமக்குப் பிடித்ததைச் செய்துகொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். நந்தா, பிதாமகன், மெளனம் பேசியதே, காக்க காக்க போன்ற சில படப்பிடிப்புகளில் எனக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. முந்தைய படத்தில் செய்ததை இந்தப் படத்தில் செய்ய வேண்டாம் என்றார் சுதா. இந்தப் படத்தில் என்னையே வித்தியாசமாகப் பார்த்தேன். படம் முழுக்கச் சிரிக்காமல் நடித்ததே பெரிய சவாலாக இருந்தது என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →