முகப்பு
செய்திகள்

மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்: படப்பிடிப்பு தொடக்கம்

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் எனச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:48 PM
பகிர்:

தடம் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் மகிழ் திருமேனியின் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

ரெட்ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் படத்தில் உதயநிதியின் ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இசையமைப்பில் மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.

மகிழ் திருமேனி - உதயநிதி ஸ்டாலின் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த வருடத்துக்குள் படப்பிடிப்பு முடிவடையும் எனத் தெரிகிறது.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் எனச் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் உதயநிதி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை மகிழ் திருமேனி தொடங்கியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →