முகப்பு
செய்திகள்

தீபாவளிக்கு வெளியாகிறது மாஸ்டர் பட டீசர்

மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:51 PM
பகிர்:

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர், தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளி தினத்தன்று (நவம்பர் 14) மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →