ஒருமுறை மட்டும் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ஆடைகளுக்கும் ஷூக்களுக்கும் அதிகமாகச் செலவு செய்ய மாட்டேன் என நடிகை சுஷ்மிதா சென் கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
எனக்கான ஆடைகளைத் தேர்வு செய்யும்போது ஃபேஷன் விமர்சகர்களை எண்ண மாட்டேன். ஆடையோ காலணியோ எது எனக்கு செளகரியமாக உள்ளதோ அதையே தேர்வு செய்வேன்.
ஃபேஷன் போலீஸிடம் எப்போதும் எனக்குப் பாராட்டுகள் கிடைக்காது. என்னுடைய ஃபேஷன் என்பது எனக்கானதாகும். அதில் நான் மிகவும் செளகரியமாக உணர்கிறேன். என்னுடைய ஆடைகள், ஷூக்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவேன். ஒரே ஒருமுறை புகைப்படம் எடுத்துக்கொள்வதற்காக ஆடைகள், ஷூக்களுக்கு என்னால் அதிகமாகச் செலவு செய்ய முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.