செய்திகள்

திருமணம் செய்துகொண்ட நடிகை சனா கான்

இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்து திருமணப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்... 

DIN

நடிகை சனா கான், தனக்குத் திருமணம் ஆன தகவலை சமூகவலைத்தளங்களில் தெரிவித்துள்ளார். 

மும்பையைச் சேர்ந்த சனா கான், 2005 முதல் நடித்து வருகிறார். தமிழில் சிலம்பாட்டம் படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்தார். தம்பிக்கு இந்த ஊரு, பயணம் ஆயிரம் விளக்கு, தலைவன், அயோக்யா போன்ற தமிழ்ப் படங்களிலும் பல ஹிந்திப் படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி பிக் பாஸ் 6 நிகழ்ச்சியிலும் பங்கேற்று இறுதிச்சுற்று வரை முன்னேறினார். 

கடந்த மாதம், திரைத்துறையிலிருந்து விலகுவதாக சனா கான் அறிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: இன்றுமுதல் திரைத்துறையிலிருந்து விலகியுள்ளேன். இனிமேல் மனிதர்களுக்குச் சேவை புரியவுள்ளேன். படைத்தவரின் கட்டளைகளைப் பின்பற்றப் போகிறேன். எனவே திரைத்துறை தொடர்பாக இனிமேல் யாரும் என்னிடம் ஆலோசிக்க வேண்டாம் என்றார். இதையடுத்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருந்த திரைத்துறை தொடர்பான அனைத்து புகைப்படங்களையும் சனா கான் நீக்கினார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 20 அன்று, அனாஸ் சையத்தைத் திருமணம் செய்துள்ளார் சனா கான். இதுபற்றி இன்ஸ்டகிராமில் தகவல் தெரிவித்து திருமணப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் - ரஷியா போா்: ஜெனீவாவில் சமாதானப் பேச்சு

புதினின் இந்திய பயணம் நற்பயன்களை ஏற்படுத்தும்: ரஷிய அதிபர் மாளிகை

கோயில் விழாவில் காவலரைத் தாக்கிய 6 போ் கைது

விபத்துக்குள்ளான வாகனங்கள் மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலம் மத்திய சிறையில் 100 ஆவது வார வள்ளுவா் வாசகா் வட்டம்

SCROLL FOR NEXT