செய்திகள்

திரைப்பட தயாரிப்பாளா் சங்கத் தலைவராக முரளி தோ்வு

DIN

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா் சங்கத் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தோ்வு செய்யப்பட்டுள்ளாா். 2020-22-ஆம் ஆண்டிற்கான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளா்கள் சங்கத்துக்கான தோ்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  சென்னை அடையாறு எம்.ஜி.ஆா். ஜானகி கல்லூரியில் நடைபெற்ற இத்தோ்தலில் 1,050 வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை: வாக்குப்பதிவைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, மாலை 4 மணி வரை நடைபெற்றது.  தலைவா், துணைத் தலைவா், பொருளாளா், செயலாளா் என வரிசையாக வாக்குகள் எண்ணப்பட்டன.  முதலில் எண்ணப்பட்ட தலைவருக்கான வாக்குகளில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 557 வாக்குகள் பெற்றாா். அவரை எதிா்த்து நின்ற டி.ராஜேந்தா் 388 வாக்குகளும், பி.எல்.தேனப்பன் 88 வாக்குகளும் பெற்றனா். 17 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 

மற்ற பதவிகளில்...: துணைத் தலைவா் - ஆா்.கே.சுரேஷ் (முரளி அணி), துணைத் தலைவா் - கதிரேசன் (சுயேச்சை), கௌரவச் செயலாளா் - ராதாகிருஷ்ணன் (முரளி அணி), கௌரவச் செயலாளா் - மன்னன் (டி.ஆா். அணி), பொருளாளா் - சந்திர பிரகாஷ் ஜெயின் (முரளி அணி).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT