செய்திகள்

ஓடிடியில் வெளியான க/பெ. ரணசிங்கம்: அக்.16-ல் திரையரங்கில் வெளியாகிறது!

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம் படம் அக்டோபர் 16 அன்று திரையரங்கிலும் வெளியாகவுள்ளது.

DIN

சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான க/பெ. ரணசிங்கம் படம் அக்டோபர் 16 அன்று திரையரங்கிலும் வெளியாகவுள்ளது.

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பெ. விருமாண்டி இயக்கியுள்ள படம் - க/பெ. ரணசிங்கம். ஜிப்ரான் இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

க/பெ. ரணசிங்கம் படம் ஜீ பிளெக்ஸ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 2 முதல் வெளியாகியுள்ளது. ரூ. 199 செலுத்தி க/பெ. ரணசிங்கம் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். 

இந்நிலையில் க/பெ. ரணசிங்கம் படம் அக்டோபர் 16 அன்று திரையரங்கிலும் வெளியாகவுள்ளது. இதுபற்றி இப்படத்தின் தயாரித்த கேஜேஆர் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் கூறியுள்ளதாவது: 

உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் - இதைச் சொல்ல எவ்வளவு நாள்கள் காத்திருந்தோம். எங்கள் அனைவருக்குமே இது உணர்வுபூர்வமான தருணம். உங்களுக்குத் திரையரங்கு அனுபவத்தைத் தர நாங்கள் மீண்டும் வந்துள்ளோம். க/பெ ரணசிங்கம் படத்தை அக்டோபர் 16 முதல் திரையரங்கில் பாருங்கள் என்று கூறியுள்ளார்.

திரையரங்குகள் வரும் 15 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், ஒவ்வொருவரும் ஒரு இடம் விட்டு அமரும் வகையிலும் 50 சதவீத பாா்வையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையிலும் வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டிருப்பதாக மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 40-வது சதம் விளாசிய ஜோ ரூட்!

கவர்ச்சிக் கலவை... நீதி மோகன்!

மெல்லினமே மெல்லினமே... ஆஷிகா ரங்கநாத்!

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மத நல்லிணக்கத்தை சிதைக்கிறது திமுக அரசு: எடப்பாடி பழனிசாமி!

உளங்கவர் ஓவியமே... மாளவிகா மோகனன்!

SCROLL FOR NEXT