முகப்பு
செய்திகள்

விஷால் - ஆர்யா நடிக்கும் படத்தை இயக்கும் ஆனந்த் சங்கர்

பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். 

Updated On : 13 அக்டோபர், 2020 at 5:11 PM
பகிர்:

அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

பாலாவின் அவன் இவன் படத்தில் விஷாலும் ஆர்யாவும் இதற்கு முன்பு இணைந்து நடித்தார்கள். 

டெடி, பா.இரஞ்சித் படம் என இரு படங்களில் ஆர்யா நடித்து வருகிறார். அதேபோல சக்ரா படத்தின் படப்பிடிப்பைச் சமீபத்தில் முடித்த விஷால், அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கவுள்ளார். இதன்பிறகே தான் நடித்து இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பைத் தொடர்வார் என்று கூறப்படுகிறது. 

Advertisement

விஷால் - ஆர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.