பிரபல பாடகர் குமார் சானுவுக்கு கரோனா பாதிப்பு!
பிரபல பாடகர் குமார் சானு, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல பாடகர் குமார் சானு, கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் குமார் சானு. 90களில் பாலிவுட்டின் பிரபல பாடகராக இருந்தார். 2009-ல் பத்மஸ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் குமார் சானு பாதிக்கப்பட்டுள்ளார். இத்தகவல் அவருடைய சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக குமார் சானு கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நலத்திற்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று தகவல் கூறப்பட்டுள்ளது.