முகப்பு
செய்திகள்

தமிழ் நடிகர்கள் 30% சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்: பாரதிராஜா வேண்டுகோள்

ரூ. 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்...

செய்திகள்

தமிழ் நடிகர்கள் 30% சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும்: பாரதிராஜா வேண்டுகோள்

ரூ. 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

பத்து லட்சம் ரூபாய்க்கும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் தமிழ்த் திரையுலகின் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் 30% சம்பளத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என மூத்த இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா பொது முடக்கம் நீடித்து வரும் நிலையில், சில தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால் தயாரிப்பாளா்கள், விநியோகஸ்தா்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளா்கள் ஆகியோா் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனா். 

கரோனா பாதிப்பால் திரையுலகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தயாரிப்பாளர்களின் வலியைப் பகிர்ந்துகொள்ள பிரபலங்கள் சிலர் முன்வந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டு வரும் வேலையை மீண்டும் தொடங்கவேண்டும். அப்படித் தொடங்க நம் நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் மனது வைக்கவேண்டும். தயாரிப்பாளர்களுக்கு 50% நஷ்டம் என்பது உறுதியாகத் தெரிகிறது. இந்தச் சூழலைப் புரிந்துகொண்ட சில நடிகர்கள் ஒப்பந்தம் செய்துகொண்ட சம்பளங்களிலிருந்து 30% குறைத்துக் கொள்வதாக வாக்குறுதி தந்திருக்கிறார்கள். 

தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படத்துறையில் அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தாமே முன்வந்து தங்கள் சம்பளங்களில் இருந்து 30 முதல் 50% விட்டுக்கொடுத்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இவர்களுக்கெல்லாம் முன்னோடியான தமிழ் சினிமாவிலும் இது நடக்க வேண்டாமா? ரூ. 10 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறைந்தபட்சம் சம்பளத்தில் 30% விட்டுக்கொடுக்க வேண்டும். இதன்மூலம் சினிமா உலகம் மீண்டெழ உதவக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →