சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம்: புதிய தகவல்
அதிகாரபூர்வ அறிவிப்பும், முதல் தோற்ற போஸ்டரும் அக்டோபர் 26 அன்று...
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சுசீந்திரன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு.
இந்நிலையில் சுசீந்திரன் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பும், முதல் தோற்ற போஸ்டரும் அக்டோபர் 26 அன்று மதியம் 12.12 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது சிம்புவின் 46-வது படம்.
கடந்த 2017, ஆகஸ்ட் 15 அன்று சமூகவலைத்தளங்களை விட்டு விலகினார் சிம்பு. எனினும் சமூகவலைத்தளங்களில் அவர் மீண்டும் இணைந்துள்ளார். ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், ட்விட்டர், யூடியூப் ஆகிய அனைத்து சமூகவலைத்தளங்களிலும் புதிய உற்சாகத்துடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார்.
சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம் வெளியாகவுள்ளது.