தீபாவளிக்கு சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகும் சுந்தர்.சி படம்!
தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த வருடம் வெளியான கன்னடப் படமான மாயாபஸார் 2016 படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதன் உரிமையை சுந்தர்.சி பெற்றுள்ளார்.
வீராப்பு, தில்லு முல்லு படங்களை இயக்கிய பத்ரி, மாயாபஸார் 2016 ரீமேக்கைத் தமிழில் இயக்கி வருகிறார்.
பிரசன்னா, ஷாம், அஸ்வின், யோகி பாபு, ஷ்ருதி மராத்தே போன்றோர் நடிக்கிறார்கள். இசை - சத்யா.
Advertisement
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்துக்கு நாங்க ரொம்ப பிஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது. தீபாவளி அன்று சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் அரண்மனை 3 படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.