முகப்பு
செய்திகள்

தீபாவளிக்கு ஓடிடியில் வெளியாகும் இரு தமிழ்ப் படங்கள்: வெளியீட்டுத் தேதிகள் அறிவிப்பு

இந்த தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் இரு புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. 

Updated On : 26 அக்டோபர், 2020 at 11:13 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:13 PM

சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று மற்றும் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் ஆகிய இரு படங்களும் இந்த தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் அடுத்த படமான சூரரைப் போற்று படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் சூர்யா. இது அவருடைய 38-வது படம்.

கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா முரளி நடித்துள்ளார். எட்டு தோட்டாக்கள், சர்வம் தாளமயம் ஆகிய தமிழ்ப்படங்களில் இவர் நடித்துள்ளார். இப்படத்துக்கு இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி.

Advertisement

சூரரைப் போற்று படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இரு நாள்களுக்கு முன்பு நவம்பர் 12 அன்று இந்தப் படம் வெளியாகவுள்ளது. 

அதேபோல அம்மன் வேடத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் - மூக்குத்தி அம்மன். இப்படத்தை ஆர்ஜே பாலாஜியும் என்ஜே சரவணனும் இணைந்து இயக்கியுள்ளார்கள். 

டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நவம்பர் 14 அன்று மூக்குத்தி அம்மன் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த தீபாவளிக்கு ஓடிடி தளங்களில் இரு புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.