ஓணம் கொண்டாட்டப் புகைப்படங்களை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்!
கேரளாவில் ஓணம் பண்டியைக் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
கேரளாவில் ஓணம் பண்டியைக் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ், அதன் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ஓடிடியில் வெளியான பெண்குயின் படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். கரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு கேரளாவில் உள்ள தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தன் குடும்பத்தினருடன் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினார் கீர்த்தி சுரேஷ். பிறகு, கொண்டாட்டப் புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.