செய்திகள்

தோனி படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க சுசாந்த் சிங் விரும்பினார்: சகோதரி ஸ்வேதா

இதைக் கேட்டு நான் மிகவும் பெருமையடைந்தேன். அடுத்த விமானத்தைப் பிடித்து இந்தியாவுக்கு வந்து...

DIN

எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தைத் தனது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பார்க்க வேண்டும் என சுசாந்த் சிங் விரும்பியதாக அவருடைய சகோதரி ஸ்வேதா சிங் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்ட படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், 2016 செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.

திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா். 

சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங் சகோதரி ஸ்வேதா சிங் கூறியதாவது:

2016 அக்டோபரில், என்னை அமெரிக்கவிலிருந்து சுசாந்த் சிங் வரச் சொன்னார். தோனி படத்தை அனைவரும் ஒன்றாகத் திரையரங்கில் பார்க்க விரும்பினார். இதைக் கேட்டு நான் மிகவும் பெருமையடைந்தேன். அடுத்த விமானத்தைப் பிடித்து இந்தியாவுக்கு வந்து, சுசாந்தின் வெற்றியை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடினோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காரில் ஒன்றாக பயணித்த MS Dhoni & Virat Kholi!

டிட்வா புயல் எச்சரிக்கை: திமுக நிர்வாகிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் - முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

ஸ்மிருதி மந்தனாவுக்காக பிபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஜெமிமா..! நட்புக்கு இலக்கணம்!

டிட்வா புயல்! புதுவை, காரைக்காலில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

இலங்கையில் கடும் வெள்ளம்! தென்னை மரத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டரில் மீட்ட ராணுவம்!

SCROLL FOR NEXT