முகப்பு
செய்திகள்

மீண்டும் இணையும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி: தகவலை உறுதி செய்த தயாரிப்பாளர்

அசுரன் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

செய்திகள்

மீண்டும் இணையும் வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி: தகவலை உறுதி செய்த தயாரிப்பாளர்

அசுரன் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

அசுரன் படத்துக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு படங்களில் இணைந்து வெற்றிகளைத் தந்த இந்தக் கூட்டணி, எல்ரெட் குமார் தயாரிப்பில் மீண்டும் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர் ஒருவருக்கு அளித்த பதிலில் இந்தப் படம் பற்றி உறுதி செய்துள்ளார் தயாரிப்பாளர் எல்ரெட் குமார். 

அசுரன் படத்துக்கு அடுத்ததாக சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதற்கடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரு படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் 5-வது படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ஜகமே தந்திரம் படம் விரைவில் வெளிவரவுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள தனுஷ், அத்ராங்கி ரே என்கிற ஹிந்திப் படத்திலும் நடித்து வருகிறார். இதன்பிறகு கார்த்திக் நரேன் படத்தில் நடிக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →