முகப்பு
செய்திகள்

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர்

1999-ல் ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்த் படம் மூலமாக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:19 PM
பகிர்:

பாலிவுட் நடிகர் அஃப்தாப் ஷிவ்தசானி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

1999-ல் ராம்கோபால் வர்மா இயக்கிய மஸ்த் படம் மூலமாக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமானார் அஃப்தாப். இதன்பிறகு கசூர், ஹங்கமா, மஸ்தி, ஸ்பீட், ஓம் சாந்தி ஓம் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் அஃப்தாப் ஷிவ்தசானி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

சமீபத்தில் எனக்கு வறட்டு இருமல் ஏற்பட்டது. லேசாகக் காய்ச்சலும் அடித்தது. இதனால் கரோனா பரிசோதனை மேற்கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். சமீபகாலமாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பாதுகாப்பு கருதி பரிசோதனை செய்துகொள்ளுங்கள். உங்கள் ஆதரவினால் விரைவில் குணமடைவேன் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →