செய்திகள்

என் பெயரைத் தவறாகப் பயன்படுத்தக்கூடாது: நடிகர் அஜித் தரப்பில் அறிவிப்பு

DIN

என் சார்பிலோ என் பிரதிநிதி போலவோ யாரேனும் அணுகினால் அவர்களை நம்ப வேண்டாம் என நடிகர் அஜித் தரப்பில் சட்ட ஆலோசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அஜித்தின் சட்ட ஆலோசகர் எம்.எஸ். பரத், அஜித் சர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இது அஜித் சார்பாகக் கொடுக்கும் சட்ட அறிக்கை.

சமீபகாலமாகச் சில தனி நபர்கள் பொதுவெளியில் என் கட்சிக்காரர் சார்பாக அல்லது அவருடைய பிரதிநிதி போல என் கட்சிக்காரர் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாகச் சில சம்பவங்கள் என் கட்சிக்காரர் கவனத்துக்கு வந்துள்ளது.

தன்னுடன் பல வருடங்களாகப் பணியாற்றி வரும் மேலாளர் சுரேஷ் சந்திரா மட்டுமே தன்னுடைய அனுமதி பெற்ற தன் பிரதிநிதி என்றும் அவர் மட்டுமே தன்னுடைய சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். 

தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி யாரேனும் அணுகினால் அத்தகவலை சுரேஷ் சந்திராவிடம் தெரிவிக்கவேண்டும். இதை மீறி இத்தகைய நபர்களிடம் தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்த ரீதியாகத் தொடர்பில் இருந்தால் அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்தவிதத்திலும் பொறுப்பு இல்லை. பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT