மிஷ்கின் அடுத்த படம்: புதிய தகவல்
தனது அடுத்த படம் பற்றி ட்விட்டரில் மிஷ்கின் கூறியதாவது...
சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.
அருண் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள மிஷ்கின் அதன்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தனது அடுத்த படம் பற்றி ட்விட்டரில் மிஷ்கின் கூறியதாவது:
Advertisement
எனது அடுத்த படத்தை செப்டம்பர் 20, 00:00 மணிக்குத் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
பிசாசு 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.