முகப்பு
செய்திகள்

பிசாசு 2: இசையமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ள கார்த்திக் ராஜா

கார்த்திக் ராஜாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மிஷ்கின். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

சைக்கோ படத்துக்கு அடுத்ததாக விஷால் நடிப்பில் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வந்த மிஷ்கின், விஷாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அப்படத்திலிருந்து விலகிவிட்டார். இதனால் துப்பறிவாளன் 2 படத்தை விஷாலே இயக்கி வருகிறார்.

அருண் விஜய்யுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ள மிஷ்கின் அதன்பிறகு சிம்பு நடிப்பில் ஒரு ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளதாகவும் இந்தப் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க யோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கடந்த மாதம் தனது பிறந்த நாளன்று பிசாசு 2 படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். இந்தப் படத்துக்கு இசை - கார்த்திக் ராஜா.

Advertisement

பிசாசு 2 படத்துக்கான இசைப்பணிகள் தொடங்கியுள்ளன. கார்த்திக் ராஜாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மிஷ்கின். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments