முகப்பு
செய்திகள்

கங்கனா ரணாவத்தின் தலைவி: மழை மழை பாடலின் விடியோ வெளியானது!

தலைவி படத்தில் இடம்பெற்றுள்ள மழை மழை பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

தலைவி படத்தில் இடம்பெற்றுள்ள மழை மழை பாடலின் விடியோ வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகியுள்ளது. 

விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.

ஏப்ரல் 23 அன்று வெளியாகவுள்ள தலைவி படத்தில் இடம்பெற்றுள்ள மழை மழை பாடலின் விடியோ வெளியாகியுள்ளது. மதன் கார்க்கி எழுதிய இப்பாடலை சைந்தவி பாடியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →