கரோனா பாதிப்பு: நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று கரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்ஷய் குமார் தகவல் தெரிவித்தார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில், மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என்று அவர் இன்று ட்வீட் வெளியிட்டுள்ளார்.
ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் நடித்துள்ளார் அக்ஷய் குமார். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படம் ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது.