முகப்பு
செய்திகள்

தமிழ்ப் புத்தாண்டு: ஓடிடியில் வெளியாகியுள்ள புதிய படங்கள்

ஹாட்ஸ்டார் ஓடிடியில் பரமபதம் விளையாட்டு படம் நேரடியாக வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:00 PM
பகிர்:

தமிழ்ப் புத்தாண்டுத் தினமான இன்று, ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகியுள்ளன.

அவற்றின் விவரங்கள்:

ஹாட்ஸ்டார்

Advertisement

த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு,

த்ரிஷா, நந்தா, ரிச்சர்ட் நடிப்பில் கே. திருஞானம் இயக்கியுள்ள படம் - பரமபதம் விளையாட்டு. இசை - அம்ரிஷ். இது த்ரிஷாவின் 60-வது படம். கடந்த வருடம் ஜனவரியில் வெளியாகவிருந்த இந்தப் படத்தின் வெளியீடு பல்வேறு காரணங்களால் தாமதமானது. 

ஹாட்ஸ்டார் ஓடிடியில் பரமபதம் விளையாட்டு படம் நேரடியாக வெளியாகியுள்ளது.

நெட்பிளிக்ஸ்

விஜய் சேதுபதி நடித்த தெலுங்குப் படம் - உப்பென்னா (Uppena)

வைஷ்ணவ் தேஜ், விஜய் சேதுபதி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் புஜ்ஜி பாபு இயக்கிய உப்பென்னா படம் கடந்த பிப்ரவரி மாதம் திரையரங்குகளில் வெளியானது. அதிகளவில் வசூலித்த இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமேசான் பிரைம்

மம்மூட்டி, மஞ்சு வாரியர், நிகிலா விமல் நடிப்பில் ஜோஃபின் டி. சாக்கோ இயக்கிய படம் தி பிரீஸ்ட் (The Priest).

கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

ஜீ5 தமிழ்

இயக்குநரும் நடிகருமான கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

லாக்கப், க/பெ. ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இதையடுத்து மதில் என்கிற படமும் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ்.எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ் புகழ் மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி. பாலமுருகன், படத்தொகுப்பு - எம். தியாகராஜன்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments