செய்திகள்

நடிகர் விவேக் உடல் தகனம்: 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை

விவேக்கின் உடலுக்குக் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தார்கள்...

DIN

நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். விவேக்கின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். 

இன்று மாலை சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றார்கள். 

மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் விவேக் உடல் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விவேக்கின் உடலுக்குக் குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்தார்கள். 72 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினார்கள்.  24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினார்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT