முகப்பு
செய்திகள்

நடிகை சஞ்சனா கல்ராணிக்கு கரோனா பாதிப்பு

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலிருந்து பணிபுரியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:03 PM
படம் - instagram.com/sanjjanaagalrani/
பகிர்:

நடிகை சஞ்சனா கல்ராணி கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்ப் படங்களில் நடித்து வரும் நிக்கி கல்ராணியின் சகோதரியும் கன்னட நடிகையுமான சஞ்சனா கல்ராணி, கரோனா வைரஸ் தொற்று காரணமாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 10 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு அவருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். வீட்டிலிருந்து பணிபுரியுங்கள். எச்சரிக்கையாக இருங்கள் என்று சஞ்சனா ட்வீட் செய்துள்ளார். 

2006-ல் ஒரு காதல் செய்வீர் என்கிற தமிழ்ப் படத்தின் மூலமாகத் திரையுலகில் அறிமுகமான சஞ்சனா கல்ராணி, பெங்களூரைச் சேர்ந்தவர். இதன்பிறகு ஏராளமான கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்துள்ளார். இவருடைய சகோதரி நிக்கி கல்ராணி, டார்லிங், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கலகலப்பு 2 என பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →