குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த நடிகை தர்ஷா குப்தா நடிகை சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி தொடர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின் 'என்ன சொல்ல போகிறாய்' என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துகொண்ட புகழும் இந்த படத்தில் நடித்து வருகிறார்.
இதனையும் படிக்க | பிக்பாஸ் நடிகருடன் மீண்டும் சின்னத்திரையில் களமிறங்கும் நடிகை குஷ்பு
இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அனைவரையும் கவர்ந்த சிவாங்கி, 'டான்' படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக ரசிகர்களின் மனதில் பதிந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி, நடிகர் சதீஷுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் மற்றொரு போட்டியாளரான தர்ஷா குப்தா 'ருத்ர தாண்டவம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதையும் படிக்க| சார்பட்டா பரம்பரை பற்றி அன்றே பேசிய நடிகர் நாகேஷ்
இதனையடுத்து தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோனுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். திகில் கலந்த காமெடி படமாக இந்தப் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், ஜி.பி.முத்து உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை யுவன் என்பவர் இந்தப் படத்தை இயக்க, ஜாவிட் இசையமைக்கிறார். இந்தத் தகவலை தர்ஷா குப்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.