முகப்பு
செய்திகள்

சிம்பு - கவுதம் மேனன் படத்தின் முதல் பார்வை வெளியீடு 

வெகு நாட்களுக்கு பின் நடிகர்  சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்வின் மற்றொரு பயணம்  ஆரம்பித்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
சிம்பு- கவுதம் மேனன் படத்தின் முதல் பார்வை வெளியீடு
பகிர்:

வெகு நாட்களுக்கு பின் நடிகர்  சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தின் மூலம் தன்னுடைய திரைவாழ்வின் மற்றொரு பயணம்  ஆரம்பித்துவிட்டது என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தார். 

அதற்கடுத்து மிக வேகமாக நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிம்பு இயக்குநர் கவுதம் மேனன் படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார்.முதலில் 'நதிகளிலே நீராடும் சூரியன்' என தலைப்பிட்டு பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது  தலைப்பு மாற்றப்பட்டு  அப்படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது .

'வெந்து தணிந்தது காடு' எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பார்வையில் கிராமப் பின்னணி கொண்ட  சாயலில் இருக்கும் சிறுவயது சிம்புவின் தோற்றம் வித்தியாசமாக இருக்கிறது. 

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.  திரைக்கதை பங்களிப்பில்  எழுத்தாளர் ஜெயமோகனும்  , பாடலாசிரியர் கவிஞர் தாமரை உள்ளிட்டோர் இணைந்திருக்கிறார்கள். நடிகர் , நடிகைகள் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →