முகப்பு
செய்திகள்

கமல்ஹாசனின் விக்ரம்: லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட மிரட்டலான போஸ்டர்

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து, ஃபகத் ஃபாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இருந்து, ஃபகத் ஃபாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன் தயாரித்து, கதாநாயகனாக நடித்து வரும் படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்தப் படத்தில் ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். 'இந்தியன் 2 ' படம் பாதியில் நிற்கும் நிலையில் கமல்ஹாசன் - அனிருத் கூட்டணியில் வெளியாகும் முதல் படமாக விக்ரம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லோகேஷூடன் அனிருத் இணைந்த 'மாஸ்டர்' பட பாடல்கள் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இதன் காரணமாக விக்ரம் பட பாடல்களை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசிலின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் புகைப்படத்துடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தனது சுட்டுரைப் பக்கம் வாயிலாக, ''பிறந்த நாள் வாழ்த்துகள் ஃபகத், நலமும் வளமும் சூழ வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →