செய்திகள்

58 கிலோ உடையா ?: பாபநாசத்தில் கமலின் மகளாக நடித்தவர் பகிர்ந்த புகைப்படம் வைரல்

பாபநாசம் படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN


'பாபநாசம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக நடித்தவர் பகிர்ந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மலையாளத்தில் திரிஷ்யம் படத்தில் மோகன்லாலின் மகளாக நடித்தவர் எஸ்தர் அனில். அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாபநாசம்' படத்திலும் கமலின் மகளாக நடித்தார். இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது தெலுங்கிலும் அதே வேடத்தில் நடித்தார்.

இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் புகைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

அந்த வகையில் இவர் தற்போது பதிவிட்டிருக்கும் புகைப்படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. நான் அணிந்திருக்கும் உடை 58 கிலோ எடை கொண்டது. ஆனால் எனது எடையே 48 கிலோ கிராம் தான். இந்த உடையைப் பார்த்தபோது ஆச்சரியமடைந்தேன்.

இந்த உடையை உருவாக்க 30 நாட்கள் எடுத்துக்கொண்டார்கள். சிறந்த தயாரிப்பு மனேஷ், ரெமி'' எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த உடையில் அவர் மிக அழகாக உள்ளதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயக்கம் பிறக்குதே... ரீனா கிருஷ்ணா

சொல்லப் போனால்... ஊழலை ஒழிக்க பிஎம்டபிள்யூ கார்கள் தேவையா?

தூரலில் நனைந்த மலராய்... ரூபினா திலாய்க்

215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள்: தமிழக அரசு

தலைமைத்துவம் குறித்து முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT