முகப்பு
செய்திகள்

கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 62 ஆண்டுகள் : ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த லோகேஷ்

நடிகர் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை வாழ்த்தும் விதமாக விக்ரம் படத்தில் இருந்து புதிய போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
பகிர்:

நடிகர் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதையொட்டி, அவரை வாழ்த்தும் விதமாக 'விக்ரம்' படத்தில் இருந்து புதிய போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். 

நடிகர் கமல்ஹாசன், இயக்குநர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், பாடகர், நடன இயக்குநர் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர். சினிமாவைக் கனவாக கொண்டுள்ள இளைஞர்களுக்கு அவர் முன்னோடியாக திகழ்கிறார். 

அவரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் ஏராளம். அந்த வகையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். தான் ரசித்த கமல்ஹாசனையே 'விக்ரம்' படத்தில் இயக்கி வருகிறார். 

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் திரையுலகுக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதையொட்டி, புதிய போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில், எங்களுக்கு எப்பொழுதும் உத்வேகம் அளியுங்கள் சார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →