செய்திகள்

'படத்தில் இதெல்லாம் பார்க்க முடியாது' - நயன்தாராவின் நெற்றிக்கண் படத்தில் இருந்து வெளியான விடியோ

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தில் இருந்து விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.  

DIN

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' படத்தில் இருந்து விடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள 'நெற்றிக்கண்' திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை (ஆகஸ்ட் 13) நேரடியாக வெளியாகிறது. இந்தப் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் தனது சுட்டுரைப் பக்கத்தில் 30 நொடிகளுக்கு ஒளிபரப்பாகும் விடியோவை பகிர்ந்துள்ளது. இந்த விடியோ நெற்றிக்கண் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டது. 

நீண்ட இடைவேளைக்கு பிறகு நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபார்முக்குத் திரும்பிய அபிஷேக் சர்மா; அரைசதம் விளாசி அசத்தல்!

எப்ஸ்டீன் கோப்புகள் சர்ச்சை: உலகப் பொருளாதார மன்றத் தலைவர் ராஜிநாமா!

சத்தீஸ்கரில் இரண்டு மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

நடிகை ரஷ்மிகாவை மணந்தார் விஜய் தேவரகொண்டா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு 10 மாவட்டங்களில் மழை

SCROLL FOR NEXT