திரைப்பட விருதுகளில் முக்கியமான விழாவாகக் கருத்துப்படும் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா 2020-2021 ஆம் ஆண்டிற்கான விருதுகளை அறிவித்திருக்கிறது.
டாக்ஸிவாலா நாயகி பிரியங்கா ஜவல்கர் போட்டோஷூட் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
இந்திய முழுவதும் பல படங்கள் தேர்வாகியிருந்த நிலையில் தமிழில் சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் ஓடிடி தளத்தில் வெளிவந்த 'சூரரைப் போற்று' திரைப்படம் இரண்டு விருதுகளைப் பெற்று அசத்தியிருக்கிறது.
மேலும் இணைய தொடர்களுக்கும் விருதுகள் அளிக்கப்பட்ட நிலையில் சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சமந்தாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான 'பேமிலி மேன் 2' பாகம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் நடிகை சமந்தாவின் கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் இணையத் தொடருக்கான சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அதே தொடரில் நாயகனாக நடித்த மனோஜ் பாஜ்பாயிக்கு சிறந்த நடிகருக்கான விருதும் வழங்கப்பட்டிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.