செய்திகள்

'சூரரைப் போற்று' படத்துக்காக சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான உயரிய விருது

'சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அறிவித்துள்ளது.

DIN

'சூரரைப் போற்று' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருதை மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அறிவித்துள்ளது.  

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த வருடம் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. 

இந்தப் படத்தை சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்தப் படம் விரைவில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

குறைந்த கட்டணத்தில் விமானப் பயணம் என்ற கொள்கைக்கு உயிர்கொடுத்த ஏர் டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றுப் படமாக சூரரைப் போற்று உருவாகியிருந்தது.

இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் நடிகர் சூரரைப் போற்று படம் திரையிடப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது மற்றும் சிறந்த படத்துக்கான விருதும் கிடைத்துள்ளது.

இதனையடுத்து கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் சூர்யாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிவிட்டரில் சூரரைப் போற்று என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லை வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நின்று செல்லும்!

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

SCROLL FOR NEXT