செய்திகள்

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்துக்காக லோகேஷுடன் மீண்டும் இணையும் 'கைதி' பிரபலம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அஞ்சாதே புகழ் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

DIN

கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் 'அஞ்சாதே' புகழ் நரேன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்

'மாஸ்டர்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் 'விக்ரம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் 'அஞ்சாதே' நரேன் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கைதி' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நரேன் தனது சுட்டுரைப் பக்கத்தில், ''ஒரு ரசிகரின் கனவு நனவானது. யாரைப் பார்த்து நடிக்க வந்தேனோ, அவருடனேயே நடிக்கிறேன்''. என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதனைப் பகிர்ந்த நடிகர் கமல்ஹாசன், விக்ரம் படக்குழு சார்பாக நரேனை வரவேற்றுள்ளார். 

'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம்  நடிக்க, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் ஷிவானி நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாா்ச் 1இல் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழா தொடக்கம்

கோடிமுனை கடலில் கரை ஒதுங்கிய டால்பின்

சென்னை பல்கலை. பட்டப்படிப்பு தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

தற்கொலை தடுப்புக்கு தேசிய முன்னுரிமை அளிப்பது அவசியம்: முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

SCROLL FOR NEXT