செய்திகள்

ஆயுத பூஜைக்கு வெளியாகும் 'வலிமை'? : திரையரங்க உரிமையாளரின் பதிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாகலாம் என்ற சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளரின் பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

DIN

நடிகர் அஜித்தின் 'வலிமை' படம் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாகலாம் என்ற சென்னை வெற்றி திரையரங்க உரிமையாளரின் பதிவு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் அஜித் நடித்து வரும் 'வலிமை' படத்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா நடிக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தை வினோத் இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் இருந்து 'வேற மாரி' பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கௌதமன் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'அண்ணாத்த' படம் தீபாவளிக்கு வெளியாகிறது. 'கேஜிஎஃப்' அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு வெளியாகும் நிலையில், ராஜமௌலியின் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் வெளியீடும் அடுத்த ஆண்டு தள்ளிப் போகிறது.

'வலிமை' வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி, ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது'' என்று பகிர்ந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இன்று உருவாகிறது சென்யார் புயல்!

ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

அடுத்த 3 மணிநேரத்துக்கு 16 மாவட்டங்களில் மழை!

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

SCROLL FOR NEXT