செய்திகள்

தவறான பரிசோதனை முடிவு: பாதிக்கப்பட்ட நடிகை ஷெரின்

தனக்கு தவறான கரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக நடிகை ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

DIN

தனக்கு தவறான கரோனா பரிசோதனை முடிவுகள் அளிக்கப்பட்டதாக நடிகை ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

'துள்ளுவதோ இளமை' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு 3வது இடம் கிடைத்தது. 

 அவருக்கு சமீபத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அந்தப் பதிவில் தனக்கு அறிகுறிதகள் எதுவும் இல்லை என்றும் கூறியிருந்தார். 

இந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், அடுத்தடுத்து இரண்டு முறை பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு கரோனா இல்லை என உறுதியாகியுள்ளது. எனவே முதல் பரிசோதனையில் தவறான முடிவு வந்திருக்கலாம். 

கடந்த 16 ஆம் தேதி எனக்கு மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கரோனா இருப்பது உறுதியானது. பின்னர் மறுநாள் 17 ஆம் தேதி மேற்கொண்ட சோதனையில் எனக்கு கரோனா இல்லை என தெரியவந்தது.

பின்னர் தற்போது மேற்கொண்ட பரிசோதனையிலும் எனக்கு கரோனா இல்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கருதி என்னை இன்னும் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளவிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT