செய்திகள்

நடிகர் விவேக்கின் மரணத்துக்கு காரணம் தடுப்பூசியா?: மனித உரிமை ஆணையம் விசாரணை

நடிகர் விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமா என மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. 

DIN

நடிகர் விவேக்கின் மரணத்துக்கு தடுப்பூசி காரணமா என மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது. 

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரமடைந்தார். மேலும் மரணிப்பதற்கு ஒரு நாள் முன் தான் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். மேலும் தடுப்பூசி செலுத்துவதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மறுதினம் நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்க மடைந்தார். உடனடியாக அவரை வட பழனயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தி தீவிர சிகிச்சைக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் மறுநாள் ஏப்ரல் 17 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 இதனையடுத்து நடிகர் விவேக்கின் மரணத்தைத் தடுப்பூசியுடன் தொடர்புபடுத்தி பேசப்பட்டது. இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் நடிகர் விவேக்கின் மறைவுக்கும், தடுப்பூசிக்கும் துளியும் சம்மந்தமில்லை என திட்டவட்டமாக மறுத்தனர். 

இந்த நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் நடிகர் விவேக் மரணமடைந்ததாக கூறி விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தற்போது தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். இதன் பேரில் தற்போது நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT