முகப்பு
செய்திகள்

முடிவுக்கு வந்த பிரச்னை: மீண்டும் துவங்கும் நடிகர் சிம்புவின் படம்

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சிம்புவின் தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படவிருக்கிறது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடிகர் சிம்புவின் தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து 'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படவிருக்கிறது. 

'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்துக்கு நடிகர் சிம்பு முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும், படத்தின் நஷ்டத்திற்கு சிம்பு பொறுப்பேற்கவேண்டும் என்றும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார்.

இதன் காரணமாக சிம்புவுக்கு தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்திருந்தது. இந்த நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு வழங்காததால் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றது. இதுகுறித்து நடிகர் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் தயாரிப்பாளர் சங்கத்தைக் கடுமையாக தாக்கிப் பேசினார்.

இந்த விவகாரம் கடந்த வாரம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் நடிகர் சிம்புவிற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து சிம்புவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →