செய்திகள்

'பிக்பாஸ் ஜோடிகள்' நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் இவர்களா ? - வெளியான தகவல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் வெற்றியாளர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

நான்கு வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் பங்குபெற்ற பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக பங்கேற்றனர். 

இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் ஜூலி, அனிதா சம்பத், ஷாரிக், அரந்தாங்கி நிஷா, சம்யுக்தா ஆகியோர் கடுமையான முயற்சியினால் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிலையில் இறுதிப் போட்டி படமாக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

இந்த இறுதிப்போட்டியில் இதுவரை ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் ஓவியா, லாஸ்லியா, ரம்யா பாண்டியன், சாக்ஸி அகர்வால் அபிராமி வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஒரே  போட்டியில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஓவியாவும், லாஸ்லியாவும் இணைந்து தோன்றுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இந்த நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் இறுதி நிகழ்ச்சியில் வெற்றியாளர்களாக ஷாரிக் மற்றும் அனிதாவும் அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு தேவை: இந்திய விமானப்படை அதிகாரி

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 351 மனுக்கள் அளிப்பு

தலைநகரில் இடியுடன் கூடிய பலத்த மழை; ‘மஞ்சள்’ எச்சரிக்கை வெளியீடு!

குடியாத்தம் நகர கழிவுநீா் சுத்திகரிப்புக்கு ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு

ஆட்டோவில் வைத்திருந்த பணத்தை திருடியவா் கைது

SCROLL FOR NEXT