25 கோடி பார்வைகளை நெருங்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடல் 
செய்திகள்

25 கோடி பார்வைகளை நெருங்கும் விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

DIN

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் 25 கோடி பார்வையாளர்களை நெருங்கி வருகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் ஜனவரி 13 அன்று பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடையே பெரும்வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோரும் நடித்திருந்தனர். 

இந்த படத்தில் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதிலும் குறிப்பாக 'வாத்தி கம்மிங்' பாடல் தற்போது யூட்யூபில் 249 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. விரைவில் இந்தப் பாடல் 25 கோடி பார்வைகளை அடைய உள்ளது. 

இதுவரை மொத்தம் 26 லட்சம் பேர் இந்தப் பாடலுக்கு விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் 24.94 கோடி முறை பார்வையிடப்பட்டுள்ளது.

இந்த பாடலுக்கு இசை அனிருத். கானா பாலச்சந்தர் இந்த பாடலை எழுதியிருந்தார். அனிருத், கானா பாலச்சந்தர் இருவரும் இந்த பாடலை பாடியிருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதீப் ரங்கநாதனின் டூட் படத்தின் முதல் பாடல்!

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

தருமபுரி திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சின்னச்சாமி காலமானாா்!

நாகை மாவட்டத்துக்கு செப். 8-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிப்பு

பிகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரும் ஏழைகள்: ராகுல்!

SCROLL FOR NEXT